27 February 2016

விளம்பர உலகம்

80களின் பிற்பாதியில் 90களின் தொடக்கத்தில் பிறந்தவர்களுக்கும் தெரியும் விளம்பரங்களும் அதன் அழகும். திலீபனாக இருந்து ரஹ்மானாக உருவெடுத்தபோது லியோ காபியில் தொடங்கிய இசைப்பயணம் CES 2016ல் Intel Curie Band Gesture Music மூலம் அடுத்த நிலை அடைந்தது. (AR Rahman With Intel Curie Bands)

ஒரு பொருள் ஒரு சாமான்யனுக்கு சென்றடையனும்னா அத அவனிடம் கொண்டு சேர்க்குற ஒரு கருவியா இருந்தது விளம்பரங்கள்தான். Adobe After Effects , Blender, Painter X3, Flash Professional, Maya, 3DMax என தொழில்நுட்ப வளர்ச்சி அடைஞ்ச இந்த காலத்திலும், திரைப்பட போஸ்டர்கள், நோட்டிஸ், துண்டுப்பிரசுரங்கள்னு விளம்பர உலகம் இயங்கிட்டுதான் இருக்கு. டிஜிட்டல் தாக்கம் இல்லாத மக்களுக்கான ஒரு கருவியா இந்த Printed Media இன்னும் இயங்கிட்டு இருக்கு. ஏன் கல்யாண வீட்டுக்கு போனா, பந்தி முடிஞ்சு வரப்போ சாக்லேட்டோ, மஞ்சப்பையோ தந்து அதுல விசிட்டிங்கார்ட் தந்து தன்னோட தொழில மார்க்கெட்டிங்க் பண்ணிட்டு தான் இருக்காங்க.

விளம்பரம் விளம்பரமாகவும் இல்லாம, ஒரு புரட்சியாவும், ஒரு கருத்த மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் ஆரம்பிச்சப்போ ஓட்டு போடுறதோட முக்கியத்துவம், பிறப்பு இறப்பு சான்றிதழ், நான்தான் முகேஷ் போன்ற விளம்பரங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தந்துதா என தெரியாது. ஆனா அதன் ஆக்கமும், வெளிப்பாடும் 100% சரியா இருந்தது. Times of India செய்த விளம்பரத்துல (Times of India Advertisement) வர அந்த சின்னப்பையன் மரத்த தள்ள, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்து எடுத்துப்போட்டு ஒற்றுமையா நிற்கும், அதுதான் தேசபக்தினு சொல்வாங்க. இப்போ மத்தியில சொல்ற தேசபக்திக்கும் இதுக்கும் 100% வித்தியாசம் இருக்கு.

விளம்பர உலகில் சிறந்த விளம்பரங்களா இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சுக்கான கேஸ் ஸ்டவ் விளம்பரம், Hutch ஆஹ இருந்தப்போ அந்த நாய்க்குட்டி விளம்பரம், பின்பு Vodafoneஆ மாறினதுக்கப்புறம் Zoo Zoo, இன்னிக்கும் கார்களின் ரிவர்ஸ் கியர்ல கேட்குற AIRTEL ரஹ்மான் இசை என TRENDING வகையறாக்களும் உண்டு. ஆகச்சிறந்த விளம்பரமான CAMLIN Marker விளம்பரமெல்லாம் இனி திரும்ப கிடைக்காது.

அரசியலிலும் நல்ல ஆரோக்யமான விளம்பரங்கள் இருந்தது Benetton செய்திருந்த ஒரு நல்ல morphed விளம்பரத்தில் (Benetton's Advertisement)  உலக தலைவர்கள் ஒவ்வொருவரும் முத்தமிட்டபடி இருக்கும். அதன் கருவானது யாரையும் வெறுக்கவேண்டாம், அன்பு பகிருங்கள் என்பதே. இப்படி மக்களை வியாபார நோக்கத்தோடு சென்றடைய வியாபாரிகள் கையாண்ட யுக்தியெல்லாம் இப்போ வியாதிகள் எல்லாம் கையிலெடுத்து அதில் செய்யும் களேபரங்களும், மொக்கைகளும் சுயஇன்ப வக்கிரத்தோட மட்டுமே இருக்கு. போட்டோஷாப் வேலை, எடிட்டிங், அனிமேஷன் என தொழில்நுட்பம் ஒருபக்கம் உயர, இதை பயன்படுத்தி ஏமாற்ற இன்னொரு பக்கம் இறங்கும் அரசியல்வியாதிகளை நம்பி அரசியல் பொறுப்பை வழங்காமல் "உள்ளே வெளியே" விளையாடும் முட்டாப்பய மக்கள் சமூகத்தின் நானும் ஒரு அங்கம் என்பது என் இப்பிறவியின் கேடு, முற்பிறவியின் சாபம்.



25 February 2016

CEOக்களும் சில்லறை அரசியலும்

80களின் பின்பாதியில் பிறந்தவர்களுக்கு இது மிகப்பரிட்சயம். பள்ளிக்கூடத்துல "கம்ப்யூட்டர் லேப்" என்ற பேர்ல ஒரே ஒரு கம்ப்யூட்டர் இருக்கும். அந்த கம்ப்யூட்டர கம்பூட்டர், கம்பீட்டர், கம்ப்லீயூட்டர் என மழலையாய் பேச கற்று பின் அமெரிக்கனும், ஆங்கிலேயனும் வியக்குற படி ஆங்கில மொழிப்புலமையும், கணினிப்புலமையும் பெற்றவர்கள் நாம். காரணம் அமெரிக்கனும், ஜப்பான் காரனும், சீனாக்காரனும், ஜெர்மனும் போட்டிகளுக்காக கண்டுபிடிப்புகளுக்கும், அறிவியல் சார்ந்த அறிஞர்களுக்கும் பணத்தை தண்ணீரா செலவு செஞ்சதும், நம்ம நாட்டுல இருந்து அவர்களுக்கு மனிதவளத்தை அளிக்க, நாம பிரயோசனப்பட்டும் படாமயும் இருக்கோம். Googleக்கு CEO ஆக முடிஞ்ச ஒருத்தர இந்த நாட்டோட வளர்ச்சிக்காக நம்ம நாட்டை ஆள்பவர்களால் மீறிப்போனா 1 மணி நேரம் அல்லது 1 நாள் மட்டுமே பேசவைக்கும் சாமர்த்தியம் இருக்கிறது. அவரை இந்த நாட்டோட வளர்ச்சிக்காக அங்கே அவரோட கான் ட்ராக்ட் முடிஞ்ச அடுத்த நாளே இங்க வரவைத்து திட்டங்கள் தீட்டும் சாமர்த்தியமெல்லாம் நம் அரசியல்வியாதிகளுக்கு வரும் காலம் பிப்ரவரி-30 ஆக இருக்கலாம்.

வரலாற்றை மாத்தி அமைக்கிற வேலைகளை விட்டுட்டு உலக மாற்றம் கொண்டு வர வேலைகளில் அவர்கள் இறங்கியதும், இன்னும் வரலாறை வைத்தும், திரித்தும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம் நம்ம நாட்டுல. தேசத்த சொல்லி பிரச்சனையில்லை. காரணம் கண்டுபிடிப்புகளுக்காக டெஸ்லா நாடு விட்டு நாடு சென்றார், மொழி கத்துகிட்டார் , சுருக்கமா சொல்லனும்னா ஐரோப்பாவுல இருந்து அமெரிக்காவுல போய் எடிசன் கிட்ட வேலை பார்த்தார். அறிவியல் மேலிருந்த காதல் மட்டுமே காரணமாயிருந்தது அந்த ஆறடி அழகு அறிவியல் அறிஞனுக்கு.

பெரும்பாலான பொறியியல் மாணவர்களும், அறிவியல் படிக்கிறவர்களும் முன்வைக்கிற பிரச்சனை "எங்களுக்கு Practicalஆ எதையும் சொல்லித்தருவதில்ல"னு, இதுல பாதி உண்மையாயிருந்தாலும், Practicalஆ, Demoவா சொல்லிக்குடுக்கதான் ஒவ்வொரு Labம் இருக்குங்குற உண்மை தெரியறதில்ல அவங்களுக்கு. அதுவுமில்லாம ஏற்கனவே நம்மள ஆண்ட ஆங்கிலேயன் இவங்ககிட்ட இருந்த மனிதவளத்தையும், கற்பனைத்திறனையும் மட்டும் வாங்கிக்கலாம் என வடிவமைத்த கல்வி அமைப்பும் காரணம்.

பல வெளி நாடுகளில் மாணவர்கள் 9, 10வது படிக்கும்போதே தங்களுக்கான விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய கவுன்சிலிங் வழங்கப்படும். இங்கே நம் நாட்டிலோ மார்க்கெட்டிங் செய்துகொண்டுதான் இருக்கிறோம். கல்விக்கான விழிப்புணர்வும் என்ன படித்தால் என்ன ஆகலாம் என்ற சரியான வழிகாட்டுதலும் இல்லாம போனதும் நம்மளோட வீழ்ச்சிக்கு காரணம். டாலருக்கான இந்திய மதிப்பு குறைய குறைய இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன் என பட்டதாரிகள் நகர்வதும் அதிகரித்துக்கொண்டே இருக்கு.

சுருக்கமாக இப்படிச்சொல்வேன் "Smart Minds are made in India, smartest Managers around the world use Indians".