25 February 2016

CEOக்களும் சில்லறை அரசியலும்

80களின் பின்பாதியில் பிறந்தவர்களுக்கு இது மிகப்பரிட்சயம். பள்ளிக்கூடத்துல "கம்ப்யூட்டர் லேப்" என்ற பேர்ல ஒரே ஒரு கம்ப்யூட்டர் இருக்கும். அந்த கம்ப்யூட்டர கம்பூட்டர், கம்பீட்டர், கம்ப்லீயூட்டர் என மழலையாய் பேச கற்று பின் அமெரிக்கனும், ஆங்கிலேயனும் வியக்குற படி ஆங்கில மொழிப்புலமையும், கணினிப்புலமையும் பெற்றவர்கள் நாம். காரணம் அமெரிக்கனும், ஜப்பான் காரனும், சீனாக்காரனும், ஜெர்மனும் போட்டிகளுக்காக கண்டுபிடிப்புகளுக்கும், அறிவியல் சார்ந்த அறிஞர்களுக்கும் பணத்தை தண்ணீரா செலவு செஞ்சதும், நம்ம நாட்டுல இருந்து அவர்களுக்கு மனிதவளத்தை அளிக்க, நாம பிரயோசனப்பட்டும் படாமயும் இருக்கோம். Googleக்கு CEO ஆக முடிஞ்ச ஒருத்தர இந்த நாட்டோட வளர்ச்சிக்காக நம்ம நாட்டை ஆள்பவர்களால் மீறிப்போனா 1 மணி நேரம் அல்லது 1 நாள் மட்டுமே பேசவைக்கும் சாமர்த்தியம் இருக்கிறது. அவரை இந்த நாட்டோட வளர்ச்சிக்காக அங்கே அவரோட கான் ட்ராக்ட் முடிஞ்ச அடுத்த நாளே இங்க வரவைத்து திட்டங்கள் தீட்டும் சாமர்த்தியமெல்லாம் நம் அரசியல்வியாதிகளுக்கு வரும் காலம் பிப்ரவரி-30 ஆக இருக்கலாம்.

வரலாற்றை மாத்தி அமைக்கிற வேலைகளை விட்டுட்டு உலக மாற்றம் கொண்டு வர வேலைகளில் அவர்கள் இறங்கியதும், இன்னும் வரலாறை வைத்தும், திரித்தும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம் நம்ம நாட்டுல. தேசத்த சொல்லி பிரச்சனையில்லை. காரணம் கண்டுபிடிப்புகளுக்காக டெஸ்லா நாடு விட்டு நாடு சென்றார், மொழி கத்துகிட்டார் , சுருக்கமா சொல்லனும்னா ஐரோப்பாவுல இருந்து அமெரிக்காவுல போய் எடிசன் கிட்ட வேலை பார்த்தார். அறிவியல் மேலிருந்த காதல் மட்டுமே காரணமாயிருந்தது அந்த ஆறடி அழகு அறிவியல் அறிஞனுக்கு.

பெரும்பாலான பொறியியல் மாணவர்களும், அறிவியல் படிக்கிறவர்களும் முன்வைக்கிற பிரச்சனை "எங்களுக்கு Practicalஆ எதையும் சொல்லித்தருவதில்ல"னு, இதுல பாதி உண்மையாயிருந்தாலும், Practicalஆ, Demoவா சொல்லிக்குடுக்கதான் ஒவ்வொரு Labம் இருக்குங்குற உண்மை தெரியறதில்ல அவங்களுக்கு. அதுவுமில்லாம ஏற்கனவே நம்மள ஆண்ட ஆங்கிலேயன் இவங்ககிட்ட இருந்த மனிதவளத்தையும், கற்பனைத்திறனையும் மட்டும் வாங்கிக்கலாம் என வடிவமைத்த கல்வி அமைப்பும் காரணம்.

பல வெளி நாடுகளில் மாணவர்கள் 9, 10வது படிக்கும்போதே தங்களுக்கான விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய கவுன்சிலிங் வழங்கப்படும். இங்கே நம் நாட்டிலோ மார்க்கெட்டிங் செய்துகொண்டுதான் இருக்கிறோம். கல்விக்கான விழிப்புணர்வும் என்ன படித்தால் என்ன ஆகலாம் என்ற சரியான வழிகாட்டுதலும் இல்லாம போனதும் நம்மளோட வீழ்ச்சிக்கு காரணம். டாலருக்கான இந்திய மதிப்பு குறைய குறைய இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன் என பட்டதாரிகள் நகர்வதும் அதிகரித்துக்கொண்டே இருக்கு.

சுருக்கமாக இப்படிச்சொல்வேன் "Smart Minds are made in India, smartest Managers around the world use Indians".




No comments:

Post a Comment